தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் - அரசாணை வெளியீடு!
நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் ஏற்கெனவே இருந்த ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்கள் அமைத்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் நிர்வாகப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஒன்றியங்களில் இருந்து பிரிக்கப்பட்டு, தற்போது புதிய ஒன்றியங்களாக அறிவிக்கப்பட்டுள்ளவற்றின் பட்டியல் பின்வருமாறு:
திருவள்ளூர் மாவட்டம்: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்: உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம்: வானூர் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து கிளியனூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி மற்றும் கானை ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து கஞ்சனூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம்: தெள்ளார் மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து மழையூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம்: தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து அஞ்செட்டி ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்: கடலாடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து சாயல்குடி ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒன்றியங்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் நிர்வாகப் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
