10வது தேர்வானவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு... ரூ.71,000 வரை சம்பளம்!

 
தமிழக அரசு

பத்தாவது தேர்சியடைந்தவர்கள், ஐடிஐ தேர்வானவர்களுக்கு சென்னையில் உள்ள தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலை வாய்ப்புகளுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சியடைதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு அரசிதழ்கள் / சிறப்பு வெளியீடுகள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் நடவடிக்கைக் குறிப்புகள், பல்வேறு சட்டமன்ற குழுக்களின் அறிக்கைகள், வரவு செலவு திட்ட ஆவணங்கள், அதிரகசிய பணிகள், தேர்தல் படிவங்கள், பதிவேடுகள், கையேடுகள், வாக்குச் சீட்டுகள், தமிழ்நாடு மாநில கணக்காய்வுத் தலைவரின் அறிக்கைகள் உள்ளிட்ட அரசின் பல முக்கிய ஆவணங்கள் அச்சு செய்யப்படுகின்றன.

தொழிற்சாலை பேப்பர் ரோல் பிரிண்டிங் ஜே.கே

இந்த பிரிண்டிங் அலுவலகத்தில் காலியாக உள்ள 24 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அலுவலகத்தில், ஜூனியர் மெக்கானிக் (01), ஜூனியர் எலக்ட்ரிஷியன் (01), அஸ்சிஸ்டண்ட் ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் (19), சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் (01). டைம் கீப்பர் (02) என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் அல்லது அதற்கு இணையான படிப்புடன் பணியிடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும்.

டிடிபி ஆபரேட்டர் பணிக்கு பிசிஏ அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பட்டப்படிப்புடன் டைப் ரைட்டிங் திறனும் அவசியம். டைம் கீப்பர் பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

தேர்வர்கள் 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு உட்பட்டோராகவும் இருத்தல் அவசியம். பிசி, எம்.பி உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகவும் , எஸ்.சி/எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

ஜுனியர் மெக்கானிக், எலக்ட்ரிஷியன், ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் ஆகிய பணியிடங்களுக்கு மாதம் ரூ.19,500 - 71,900 - வரை சம்பளம் கிடைக்கும்.  டிடிபி ஆபரேடர் பணிக்கு ரூ.35,600 - 1,30,800 வரையும் , டைம் கீப்பர் பணிக்கு ரூ.18,200 - 67,100 வரையும் சம்பளமாக கிடைக்கும்.

தேர்வு

தேர்வு முறை:

எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட்டு சுய விவரங்கள் மற்றும் தேவையான கல்வி தகுதிகளுக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

எழுதுபொருள் (ம) அச்சுத்துறை ஆணையரகம் 11, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 31.01.2024

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web