தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் - ஜனவரி 25க்குள் ஆசிரியர்கள், பொதுமக்களின் கருத்துகள் வரவேற்பு!

 
டிபிஐ பாடநூல் பள்ளிக்கல்வி துறை

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசு உருவாக்கி வரும் 'தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025'-ன் ஒரு பகுதியாகப் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வகுப்புகள்: 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சூழ்நிலையியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளன.

உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக்களின் வழிகாட்டுதலின்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது.

டிபிஐ பள்ளி கல்வித்துறை

புதிய பாடத்திட்டத்தின் முழு விவரங்களையும் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று ஜனவரி 6ம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnschools.gov.in என்ற முகவரியில் பார்க்கலாம். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இது குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

இணையதளத்தில் உள்ள பிரத்யேக 'இணையவழிப் படிவத்தை' பூர்த்தி செய்து, உங்கள் சுய விவரங்களுடன் கருத்துகளைப் சமர்ப்பிக்கலாம். வரும் ஜனவரி 25ம் தேதிக்குள் கருத்துகளை அனுப்பி வைக்க வேண்டும்.

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! பள்ளிக் கல்வி அமைச்சர் !!

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் தேவைகளுக்கு ஏற்பக் கல்வியை வழங்கவும் இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தில் தேவையான இறுதித் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!