தமிழக அரசின் புதிய உத்தரவு - பொதுத்தேர்வில் இனி ஆசிரியர்களே 'ஸ்கிரைப்'!
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, அவர்கள் சொல்வதைக் கேட்டுத் தேர்வை எழுதுபவர்களாகப் பள்ளி ஆசிரியர்களே நியமிக்கப்படுவார்கள் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா அதிரடியாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, சொல்வதை எழுதுபவர்களாகக் கல்லூரி மாணவர்கள் அல்லது 'இல்லம் தேடி கல்வி' திட்ட தன்னார்வலர்களை நியமிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இதில் நடைமுறைச் சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டுகளைப் போலவே ஆசிரியர்களே இந்தத் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கண் பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், எதிர்பாராத விபத்துகளால் உடல் ஊனமுற்றோர் அல்லது கை முறிவு ஏற்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா மற்றும் நரம்பியல் குறைபாடு உடையோர் போன்ற பாதிப்புகள் உள்ள மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அல்லது கூடுதல் நேரம் மற்றும் 'ஸ்கிரைப்' வசதி வழங்கப்படும்:, .
தேர்வுப் பணிகளுக்காக மாநிலம் முழுவதும் சுமார் 49,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 4,900 பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 11-ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.

இந்த அறிவிப்பின் மூலம், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களிடம் பயமின்றித் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்பதால் மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
