துப்பாக்கி சூடு, சாராய சாவு இல்லாமல் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.. டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி!

 
சைலேந்திரபாபு

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில், தமிழக காவல்துறை மண்டல அளவிலான போட்டிகளை துவக்கி வைத்த, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, செய்தியாளர்களிடம் கூறிய போது, "தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்பதற்கு சில வரையறைகள் உள்ளன.  அதில், ஜாதிக் கலவரங்கள், மதக் கலவரங்கள் போன்ற மோதல்கள் எதுவும் இல்லாமல், துப்பாக்கிச் சூடுகள், சாராய சாவுகள் இல்லாமல் மிக அமைதியாக தமிழகம் தற்போது உள்ளது.  அதே போல, மாநில அளவில் உள்ள எல்லா ரவுடிகளின் பட்டியல்களும் தயாரிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பல ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  மேலும், நிதி நிறுவனங்கள் மூலம் பல லட்சம் மக்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்களை 'இன்டர்போல்' போலீஸ் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சைலேந்திரபாபு

மாநகர விரிவாக்கம் என்பது திருச்சி மட்டுமல்ல, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இது போன்ற விரிவாக்கம் என்பது தேவையாக உள்ளது. புதிய  தொழிற்சாலைகள், புதிய குடியிருப்புகள் என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தேவையின் அடிப்படையில் புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

தமிழக முதல்வர், காவலர்களுக்கு, 7 நாள் முழுவதும் வேலை என்று இருந்ததை சட்டத்திருத்தம் செய்து, மற்ற அரசு ஊழியர்களைப் போல வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் தான் வேலை. ஆறாவது நாள் வேலை செய்தால் அதற்கு ஈட்டுத்தொகை (ஈசிஆர்) வழங்கப்படுகிறது. 7வது நாள் கட்டாய ஓய்வு வழங்கப்படுகிறது.

சைலேந்திரபாபு

ஒரு சில காலக்கட்டங்களில், குறிப்பாக, ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு, திருவண்ணாமலை தீபம் போன்ற முக்கியமான திருவிழா காலங்களில் விடுமுறை வழங்க முடியாது என்ற நிலை உள்ளது. இருப்பினும், வாரத்தில் ஒரு நாள் காவலர்களுக்கென விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. அவ்வழக்கு மீண்டும் சிபிஐக்கு  மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதே போல, வேங்கைவயல் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையும்  சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. அவ்வழக்கும் சிபிஐக்கு மாறுவதற்கான வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web