தமிழகமே அதிர்ச்சி... 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம் - தந்தையே பலாத்காரம் செய்த கொடூரம்!

 
கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

மயிலாடுதுறையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயதுச் சிறுமியைச் சொந்த தந்தையே பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக அந்தத் தந்தையை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது தாயார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்தச் சிறுமி 6 வாரக் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம்

விசாரணையில், சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்ற பிறகு, டீக்கடையில் வேலை செய்து வந்த அவரது தந்தையே கடந்த இரண்டு மாத காலமாக மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அந்தத் தந்தையைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!