தமிழகத்தில் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
கன மழை

தமிழகத்தில் இம்மாதம் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதியோடு விலக வாய்ப்பிருந்தாலும், தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இம்மாதம் 18ம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இடி மின்னல் மழை

இன்று தமிழகத்திலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பிருப்பதாகவும், நாளை முதல் இம்மாதம் 18ம் தேதி வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web