அசத்தல் சாதனை!! ஆசிய தடகள போட்டியில் தமிழக வீரர் பதக்கம்!!

 
சந்தோஷ்

2023ம் ஆண்டுக்கான ஆசிய தடகள போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்   நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற   400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் கலந்துகொண்டார்.  இதில், அவர் 49.09 நொடிகளில் இலக்கை அடைந்து 3ம் இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.  

சந்தோஷ்

இவர் 49.09 நொடிகளில் ஓடிய இந்திய வீரர் என்ற பெருமையையும்  பெற்றுள்ளார். இதற்கு முன்   49.49 நொடிகளில் ஓடியதே சாதனையாக இருந்தது. இந்த போட்டியில் கத்தார் வீரர் முகமது ஹமீதியா பசீம் தங்க பதக்கத்தையும், ஜப்பானின் யுசாகு கொடோமா வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

ஆசிய தடகளப் போட்டி

மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும்  ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதியார்ராஜீ 13.9 நொடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.   இதன் மூலம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் பந்தயத்தில் முதன் முறையாக இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது. இதே போன்று ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் தங்கம் வென்று அசத்தல் சாதனை படைத்துள்ளார்.  அதே போல்  ஆடவருக்கான மும்முனைப் போட்டியில் இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்றுள்ளார். 
 மற்றொரு இந்திய வீரர்   யாஷஸ் பலக்‌ஷா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தாலும்,  போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இந்த தொடர் போட்டிகளில் இந்தியா  5 தங்கம், 3 வெள்ளி உட்பட 12 பதக்கங்களுடன்  பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் இருந்து வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்