தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 
விடுமுறை

தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைகளைக் கொண்டாடும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பள்ளி

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் இன்று (டிசம்பர் 15) முதல் அரையாண்டுத் தேர்வு (இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு) தொடங்கியுள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 23-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. இதில் வினாத்தாளை வாசிக்க 10 நிமிடங்களும், தேர்வர்களின் விவரங்களைச் சரிபார்க்க 5 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விடுமுறை

டிசம்பர் 23ம் தேதியோடு தேர்வுகள் முடிவடைய உள்ள நிலையில், மாணவர்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24, 2025 முதல் ஜனவரி 1, 2026 வரை (9 நாட்கள்). கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்த பிறகு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!