பேருந்தில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர்… திருத்தணியில் நாம் தமிழர் கட்சி போராட்டம்
தமிழக அரசு பேருந்துகளில் ‘அரசு போக்குவரத்து கழகம்’ என்ற பெயருக்கு பதிலாக ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என எழுத வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர் இடம்பெறுவது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த கோரிக்கை அரசியல் வட்டாரங்களில் விவாதமாகி வருகிறது.
இந்த நிலையில், திருத்தணி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமு தலைமையில் கட்சி நிர்வாகிகள் வந்தனர். பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில் ‘அரசு போக்குவரத்து கழகம்’ என்ற இடத்தில் ‘தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கரை ஒட்டினர். திமுக அரசை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.
பேருந்துகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திருத்தணி போலீசார் உடனே தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 22 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது செய்தனர். இந்த சம்பவம் திருத்தணி பகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
