"தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?" - 2026 தேர்தலுக்கான முதல்வர் ஸ்டாலினின் அதிரடி முழக்கம்!
சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 1.7 லட்சம் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் டிஜிட்டல் ஏஜென்ட்கள் பங்கேற்ற இந்த பிரம்மாண்டக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
தேர்தலை ஒரு மாநில உரிமைகள் போராட்டமாகச் சித்தரித்த முதல்வர், "வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவதுதான் இந்தத் தேர்தல்" என்று முழங்கினார். திமுக கூட்டணிக்கு மாற்றாக யாருக்கு வாக்களித்தாலும், தமிழகத்தில் 'வளர்ச்சி அரசியல்' மறைந்து 'கலவர அரசியல்' வந்துவிடும் என்று எச்சரித்தார்.
வாக்குச்சாவடி முகவர்களுக்கு, ஒவ்வொரு முகவருக்கும் ஒதுக்கப்பட்ட 100 வாக்காளர்களைக் குறைந்தபட்சம் 5 முறையாவது நேரில் அணுக வேண்டும். அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகள் மற்றும் சொல்லாத பல திட்டங்களையும் மக்களிடம் விளக்க வேண்டும். இன்னும் மீதமுள்ள சில கோரிக்கைகளை அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரும்போது நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று மக்களிடம் உறுதி அளிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் பாதாளத்திற்குச் சென்ற தமிழகப் பொருளாதாரத்தை மீட்டு, தற்போது 'இரட்டை இலக்க வளர்ச்சி' அடையச் செய்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இதுவரை ரூ. 11 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட முகவர்கள் மத்தியில் பேசியதால், சென்னைக்கான திட்டங்களை அவர் முன்னிலைப்படுத்தினார்:
கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், சென்னையின் வளர்ச்சிக்கு இன்னும் பல பிரம்மாண்டத் திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
