தமிழக வெற்றிக் கழக நிர்வாகி 85 லட்சம் மோசடி... பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

 
தமிழக வெற்றிக் கழக

சேலம் மாவட்டத்தில் பேட்டரி ஸ்கிராப் வியாபாரி ராஜா, ஜலீல் என்பவரால் ரூ.85 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. ஜலீல் தொடர்ந்து பணம் தருவதாக நம்பவைத்து சரக்குகளை அனுப்பச் செய்து ஏமாற்றியதாக தெரிகிறது.  
சேலத்தில் பழைய பேட்டரி ஸ்கிராப் வியாபாரம் செய்துவரும் ராஜா  கடந்த 10 வருடங்களாக கிச்சிப்பாளையம் பகுதியில் கமிஷன் அடிப்படையில் வியாபாரம் செய்து வருகிறார். ராஜா வெளியிலிருந்து பழைய பேட்டரிகளை வாங்கி, சிறிய லாபத்தில் விற்பனை செய்து வரும்  தொழிலை நடத்தி வந்துள்ளார். 
ராஜாவுக்கு நன்கு அறிமுகமான வாடிக்கையாளர் சேர்த்தன்  மூலம் சென்னை அண்ணாநகரில் வசிக்கும் ஜலீல்  அறிமுகமானார். சரக்கு தேவைப்படுவதால், ஜலீல் தொடர்ச்சியாக தொகை கொடுக்கிறார் என நம்ப வைத்து, மொத்தமாக 3  தவணைகளில் ரூ.85 லட்சம் மதிப்புள்ள பேட்டரி சரக்குகளை அனுப்பச் செய்தார்.  

ரூ8,22,000/- மோசடி ! மிளகு கொள்முதல் செய்து ஏமாற்றிய ஜவுளிக்கடை உரிமையாளர் !
ஒவ்வொரு முறையும் பணம் கேட்டபோது, “தங்களிடம் நம்பிக்கை இல்லையா?” என கூறி ஜலீல் ராஜாவை நம்ப வைத்தார்.  சரக்கு பெற்றும், ஆவணங்களை வழங்க மறுத்து, காலம் தாழ்த்தியிருக்கிறார். 4 வது முறையாகவும் சரக்கு கேட்டபோது சந்தேகம் ஏற்பட்ட ராஜா, ஜலீலை குறித்து விசாரிக்கத் தொடங்கினார். விசாரணையில் ஜலீல் இதேபோல் பலரையும் ஏமாற்றி வருவது தெரியவந்தது. அதன்பிறகு  போனில் அழைப்புகளை துண்டித்ததும் ராஜாவின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.  


வெளியே வாங்கிய சரக்குகளுக்கான பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டார்.இதனால் ராஜா வியாபாரத்தில் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. சிலர் கூட சாமானை கொடுத்து பணம் திரும்பாததால் அவரிடம் நம்பிக்கை இழந்துள்ளனர்.  இவரது மோசடி மோசடி வட்டாரம் ரூ.10 கோடியை தாண்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமாக ரூ.85 லட்சம் ஏமாற்றம் செய்யப்பட்டதாக ராஜா புகார் அளித்திருப்பது  குறிப்பிடத்தக்கது. மோசடி புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜலீல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web