பட்ஜெட்டால் தமிழ்நாடு பயனடையும்... நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து - எடப்பாடி!
மத்திய பட்ஜெட் 2026-27 குறித்து அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (EPS) தனது விரிவான கருத்துக்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். ஆளுங்கட்சியான திமுக பட்ஜெட்டை விமர்சித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த பட்ஜெட்டில் உள்ள சாதகமான அம்சங்களை வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கையில், தொடர்ந்து 9-வது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் உறுதியற்ற சூழ்நிலையிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்: 2025-26 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5% முதல் 7% ஆக உயரும். 2026-27 நிதியாண்டில் இது 6.8% முதல் 7.2% வரை இருக்கும் என்ற கணிப்பு இந்தியாவின் வலுவான பொருளாதார நிலையைக் காட்டுகிறது. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கவும், கடன் அளவைக் கட்டுப்படுத்தவும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் வருங்கால வளர்ச்சிக்கு உதவும் என அவர் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தின் முக்கியத் தொழில்துறைகளைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்:
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஜவுளி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பூங்காக்கள், தமிழகத்தின் ஜவுளி மையங்களான திருப்பூர் மற்றும் கரூர் போன்ற பகுதிகளுக்குப் பெரும் பயனளிக்கும். சிறு, குறு தொழில் மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஆதாரத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. குறிப்பாக, நிதி ஆதாரத்தை உறுதி செய்ய ₹2,000 கோடி மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி நிதியாக ₹10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் அதிகம் உள்ள மாநிலமான தமிழ்நாடு, இந்த அறிவிப்பால் மிகப்பெரிய அளவில் பயன்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஆராய்ச்சி, உயர்தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), மின்னணு உற்பத்தி மற்றும் மருந்துத் துறைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அவர் பாராட்டினார். சரக்கு வேக வழித்தடங்கள், அதிவேக ரயில் பாதைகள் மற்றும் நீர் வழிப் பாதைகள் மேம்பாடு போன்றவை இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார். ஆயுர்வேதம் மற்றும் கால்நடைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை வரவேற்கத்தக்கது.
ஒட்டுமொத்தமாக இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவை உலக அளவில் பொருளாதார ரீதியாக ஒரு வலுவான நாடாக உயர்த்த வழிவகுக்கும் என்பதால், பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதி அமைச்சருக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
