தமிழ்நாட்டின் முதல் 'சோலார் படகு' சேவை தொடக்கம்... சுற்றுலா பயணிகள் வரவேற்பு!

 
பிச்சாவரம் சோலார் படகு

தமிழ்நாட்டின் முதல் "காலநிலை மீள்திறன்மிகு கிராமம்" திட்டத்தின் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சூரிய ஒளி சக்தியால் இயங்கும் படகு சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களாகக் கண்டறியப்பட்ட 11 பகுதிகளில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவிலுள்ள கிள்ளை பேரூராட்சியும் ஒன்று. இந்தப் பகுதியை முழுமையாகப் பசுமை வளாகமாக மாற்றும் முயற்சியில் இந்த சோலார் படகு சேவை ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்த படகு 100% சூரிய ஆற்றலால் இயங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் பயன்பாடு மற்றும் புகை வெளியேற்றம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

மோட்டார் படகுகளால் ஏற்படும் சத்தம் மற்றும் நீர் மாசுபடுதல் தடுக்கப்படுவதால், பிச்சாவரத்தின் அலையாத்தி காடுகள் மற்றும் அங்குள்ள உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது. ரூ. 24 லட்சம் செலவில் இந்த நவீன படகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படகில் ஒரே நேரத்தில் 14 பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இந்தப் படகு சேவையை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அதிகாரிகளுடன் படகில் பயணம் செய்து அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். பிச்சாவரத்தைப் பசுமைச் சுற்றுலாவாக (Green Tourism) மாற்ற வனத்துறை மற்றும் மீன்வளத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!