தமிழகத்தின் வளர்ச்சி 9.69% ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

முதல்வர் கடந்த நான்கு ஆண்டுகள் எடுத்த பல்வேறு முயற்சிகளினால் தமிழகத்தின் வளர்ச்சி 9.69 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் சுயதொழில் தொடங்கவிருக்கும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புத்தொழில் களம் என்ற நிகழ்ச்சி கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி உடப்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சி 9.69 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது மிக சிறப்பானது. 9.69 சதவிகிதம் என்பது கடந்த 10 ஆண்டுகள் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது எட்ட முடியாத வளர்ச்சி. முதல்வர் கடந்த நான்கு ஆண்டுகள் எடுத்த பல்வேறு முயற்சிகளினால் நமக்கு இந்த மிகப்பெரிய வளர்ச்சி கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு நம்முடைய பொருளாதாரம்15.79 ஆக இருந்தது 17.23 லட்சமாக இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி என்பது 2030 ஆம் ஆண்டில் நாம் ஒரு ட்ரில்லியன் டாலரை நான் பெறக்கூடிய வகையில் இந்த வளர்ச்சி இருக்கும். முதல்வர் எடுத்துள்ள பல முயற்சிகள், தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு தொழில் முதலீடுகளை இங்கு கொண்டு வருவதற்கு அவர் எடுத்த முயற்சி மிகுந்த ஒரு சான்றாக அமைந்துள்ளது என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!