நாளை தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் - முக்கிய எதிர்பார்ப்புகள்!

 
பட்ஜெட்

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை 9:30 மணிக்கு தனது கன்னி பட்ஜெட் உரையைத் தொடங்குகிறார். இது 2026 மே மாதம் அமையப்போகும் புதிய அரசு முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் வரையிலான இடைக்கால நிதி ஒதுக்கீடாகும்.

நாளை காலை 9:30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு (இடைக்கால பட்ஜெட்) மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (வேளாண் பட்ஜெட்) ஆகியோர் தாக்கல் செய்கின்றனர். 2026-2027 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் பெற இந்த 'வாட் ஆன் அக்கவுண்ட்' (Vote on Account) தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக பட்ஜெட்

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மக்களைக் கவரும் வகையில் பின்வரும் அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தற்போது பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு அல்லது பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான ஏதேனும் ஒரு சாதகமான அறிவிப்பு. மெட்ரோ ரயில் திட்டங்களின் அடுத்தகட்ட விரிவாக்கம் மற்றும் புதிய மேம்பாலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.

தனி பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்படும் வேளாண் நிதிநிலை அறிக்கையில், விவசாயக் கடன் தள்ளுபடி அல்லது புதிய வட்டியில்லா கடன் திட்டங்கள்., பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்கான கூடுதல் நிதி, டெல்டா மாவட்டங்களில் இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான சிறப்பு நிவாரணத் தொகுப்பு.

பட்ஜெட்

பட்ஜெட்டுக்கு முன்னதாக இன்று வெளியான தமிழகப் பொருளாதார ஆய்வறிக்கையில் சில முக்கியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் மொத்த மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் 41.23% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியில் தமிழகம் பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டியுள்ளது.  தேசிய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அலுவல் ஆய்வுக் குழு கூடிச் சபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்யும். பிப்ரவரி 20-ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறும் எனத் தெரிகிறது. இதுவே தற்போதைய 16-வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் ஆகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!