“ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது" - முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

 
ஸ்டாலின்

இன்று சென்னையில் நடைபெற்ற 'இந்தியா டுடே'  ஊடகத்தின் வட்டமேசை மாநாடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், சமீபகாலமாக காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது குறித்து முதன்முறையாகத் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்:

"ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் (காங்கிரஸ்) தெரியும்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கூட்டணியைப் பிரிக்க நினைப்பவர்களே இத்தகைய கோரிக்கைகளைத் தூண்டிவிடுவதாகவும், திமுக - காங்கிரஸ் கூட்டணி 2026 தேர்தலிலும் வலுவாகத் தொடரும் என்றும் அவர் கூறினார். ராகுல் காந்தி தனக்குச் சகோதரர் போன்றவர் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஸ்டாலின்

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த முதல்வர், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு, ரயில்வே திட்டங்கள் என எதிலுமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மத்திய அரசு 'ஜீரோ' மதிப்பெண் வழங்கியுள்ளது. வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு 'ஜீரோ' வழங்குவார்கள்" என்றார்.

செங்கல்பட்டு திருவிடந்தையில் நடைபெற்ற கூட்டத்தில், 2026 தேர்தலுக்கான வியூகங்களை அவர் வகுத்துக் கொடுத்தார்: வரும் தேர்தல் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தேர்தல் என்றவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

திராவிட மாடல் அரசின் திட்டங்களை ஆய்வு செய்யப் பல மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் தமிழகத்திற்கு வருவதைக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் வளர்ச்சி உலக நாடுகளுக்கு இணையாக உயரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!