தமிழறிஞர் வி.ஜெயதேவன் மறைவு… கல்வித்துறையில் பெரும் இழப்பு!
புகழ்பெற்ற தமிழறிஞரும் தமிழ் அகராதியியல் ஆய்வாளருமான பேராசிரியர் வி.ஜெயதேவன் சென்னையில் காலமானார். வயது முதிர்வால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் நீண்ட காலம் பணியாற்றியவர் என அறியப்பட்டார்.
திருச்சி மாவட்டம் உப்பிலாபுரத்தில் பிறந்த இவர் தாவரவியல் மற்றும் தமிழ் பாடங்களில் மேற்படிப்பு முடித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழக தமிழ் துறையில் பேராசிரியராகவும் துறை தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழ்ச்சொற்களஞ்சிய மறுசீரமைப்பு மற்றும் பல ஆராய்ச்சி பணிகளில் முக்கிய பங்களிப்பு செய்தார்.அவருக்கு அன்பு தேவன் என்ற மகன் உள்ளார். அவரது இறுதி சடங்கு குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
