“தமிழ்த்தாய் வாழ்த்தே மரபு… சர்ச்சை உருவாக்க முயற்சி” ... அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

 
ரகுபதி

தமிழ்நாடு சட்டமன்ற மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதுதான் நடைமுறை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்த மரபை மீறி சட்டப்பேரவையில் தேவையற்ற பிரச்சினைகளை எழுப்ப முயற்சி நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் நடந்த விவகாரங்கள் குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் விளக்கம் அளித்தார்.

ரகுபதி

ஆளுநர் ஆர்.என். ரவி பேசும் போது அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டது என்ற தகவலை அமைச்சர் மறுத்தார். ஆளுநர் பேச முயன்ற நேரத்தில் செய்தியாளர் அறையில் ஆடியோ துண்டிக்கப்பட்டது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாக கூறினார். ஆளுநரின் மைக்கை அணைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும், அப்படிப்பட்ட எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆளுநர்

சட்டப்பேரவைக்குள் சர்ச்சை உருவாக்க ஆளுநர் முயன்றதாகவும் அமைச்சர் விமர்சித்தார். அரசு தயாரித்து வழங்கிய உரையை முழுமையாக வாசிக்காமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மரபுக்கு எதிரானது என்றார். ஆளுநர் அரசியல் சார்புடன் செயல்படுவது பதவியின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றும், மத்திய அரசே தமிழக பொருளாதார வளர்ச்சியை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!