காசியில் தமிழ் குரல் … பள்ளி கல்லூரிகளில் தமிழ் வகுப்புக்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த ஆண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் தொடர்ச்சியாக, தமிழுக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. அந்த நிகழ்வின்போது, வாரணாசியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்புப் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அரசு குயின்ஸ் கல்லூரியில் தினசரி மாலை நேர தமிழ் வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட பள்ளி கல்வி ஆய்வாளர் உத்தரவிட்டுள்ள நிலையில், விரைவில் வகுப்புகள் தொடங்கப்படும் என கல்லூரி முதல்வர் சுமித் குமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வாரணாசியில் மேலும் பல கல்லூரிகளும் தமிழ் வகுப்புகளை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன. கலாச்சாரம் மற்றும் மொழி பரிமாற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில், வாரணாசியிலிருந்து 50 ஆசிரியர்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பி இந்தி கற்பிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
