தமிழ் விழித்தது, பிழைத்தது... மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

 
முதல்வர் ஸ்டாலின்
 

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி கொள்கை மூலம், மும்மொழி கொள்கை, அதன் மூலம் மறைமுகமாக இந்தி மொழி திணிப்பை மத்திய அரசு மேற்கொள்கிறது என தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி அதிமுக, நாதக, தவெக என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மத்திய அரசு எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தமிழ்நாடு அரசு மும்மொழி கொள்கையை ஏற்காது என முதல்வர்  ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். இதனை தொடர்ந்து இன்று இந்தி மொழியால் மற்ற வடமாநில மொழிகள் அழிந்துவிட்டன என கூறி ஒரு பதிவை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்புச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டது என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, ப்ராஜ், புந்தேலி, கர்வாலி, குமாவோனி, மாகஹி, மார்வாரி, மால்வி, சத்தீஸ்கர்ஹி, சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, குர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல மொழிகள் உள்ளது.
ஒரு ஒற்றை இந்தி மொழியால்  தாய்மொழிகளைக் கொல்லும். உத்திரப்பிரதேசம்,  பீகாரும் ஒருபோதும் இந்தி அங்கு தாய்மொழியாக இருந்ததில்லை. அவர்களின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்களாக இருக்கின்றன. இதனை முன்கூட்டியே அறிந்து இருப்பதால் தமிழகம் அதனை எதிர்க்கிறது.
தமிழ் விழித்தது, தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது. சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன, இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. ” என பதிவிட்டுள்ளார். இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி. தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.  


ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய்மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை, இந்தி பரவிய நிலப்பரப்பெங்கும் காண முடியும். உ.பி, பீகார், ம.பி. ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன. 
திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், தொடர்ச்சியான போராட்டத்தினாலும் நம் தாய்த் தமிழ்மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன. மும்மொழித் திட்டம் என்ற பெயரில் என்னென்ன மொழிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என அட்டவணையைப் பார்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. 


தமிழகத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக இருந்து வருகின்றன.  இதுகுறித்து, திருச்சி சிவா எம்.பி, தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்களின் நியமனம் குறித்து ஏதேனும் விவரம் உள்ளதா? என எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 5-8-2021 அன்று அளித்த பதிலில், ஆசிரியர்கள் K.V. பள்ளிகளில் மாநில மொழிகளுக்கான ஆசிரிய நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இதுதான் பா.ஜ.க அரசின் தமிழ் மீதான அக்கறை. ஆரியப் பண்பாட்டைத் திணிக்க எவர் முயற்சித்தாலும் அதற்கு இந்த மண்ணில் இடம் கிடையாது என்ற வகையில் அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அந்த வரலாற்றுப் பக்கத்தைப் புரட்டினால்தான் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை இளையதலைமுறை புரிந்துகொள்ள முடியும் என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web