பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழில் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிப்பு!
Jun 19, 2025, 05:33 IST

பால சாகித்ய புரஸ்கார் விருது பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழில் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ‘ஒற்றைச் சிறகு ஓவியா" என்ற நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
‘ஒற்றைச் சிறகு ஓவியா" என்ற நூல், சிறுவர்களுக்கான ஒரு புதினம் ஆகும், இதை விஷ்ணுபுரம் சரவணன் எழுதியுள்ளார். புத்தகத்தின் கதைப்படி, நந்திமங்கலம் அரசுப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி ஓவியாவுக்கு ஒரு நாள் எதிர்பாராத விதமாக ஒற்றைச் சிறகு முளைக்கிறது.
மேலும், அவள் தன் நண்பர்களுடன் சேர்ந்து பறக்கத் தொடங்குகிறாள். இந்த நூலை புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!