“பாரதியார் இருந்திருந்தால் மோடிக்கு வாழ்த்து பாடியிருப்பார்!” ... தமிழிசை ஆவேசம்!
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய தமிழிசை செளந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களுடன் பேசியபோது தீப்பொறி பேச்சு ஆற்றினார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட பதவி நீக்க முயற்சி குறித்து கடும் கண்டனம்ிறுத்தார். “நீதித்துறை அரசியலமைப்பின் தூண்… தீர்ப்பு பிடிக்கவில்லை என்பதற்காக நீதிபதியை நீக்க முயல்வது மக்களுக்கு செய்யும் அநீதி” என சாடினார். திமுக எம்.பி.க்கள் ஹிந்து மத உணர்வுக்கு எதிராக கையெழுத்திட்டதாக குற்றம் சாட்டிய அவர், மக்களிடம் அதற்கான பதில் கேட்க வைப்போம் என்றும் சவால் விட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமனின் கருத்துகளை திட்டவட்டமாக எதிர்த்த தமிழிசை, “பெரியார் கொள்கைபடி தான் தீர்ப்பு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்… இது நீதிமன்றத்தையே மிரட்டுவது” எனச் சுட்டிக்காட்டினார். நீதிபதி சுவாமிநாதனை சாதி அடிப்படையில் தாக்குவதை வன்மையாக கண்டித்த அவர், “பாரதியார் பிறந்தநாளில் சாதியை பார்ப்பதில்லை… ஆனால் இவர்கள் சாதியை மட்டுமே பார்க்கிறார்கள்” என்று தாக்கினார்.
பாரதியாரும் பிரதமர் மோடியும் தொடர்பான தனது முன் கருத்தையும் மீண்டும் வலியுறுத்திய தமிழிசை, “பாரதியார் இன்று இருந்திருந்தால் மோடிக்கு ஒரு வாழ்த்து பாடியிருப்பார்… தேசியத்தையும் தெய்வீகத்தையும் முன்னெடுக்கும் தலைவர் அவர்” எனக் கூறினார். காசியில் தமிழ் இருக்கை அமைத்தது முதல், திருக்குறளை உலகமெங்கும் கொண்டு சென்றது வரை பிரதமர் தமிழுக்கு அளிக்கும் மரியாதையைப் பட்டியலிட்ட அவர், “2026-இல் NDA ஆட்சிக்கு வந்ததும் பாரதியாருக்கு பிரம்மாண்ட அரசு விழா நடத்தப்படும்” என தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
