தமிழக பட்ஜெட் 2025 ... என்னென்ன சிறப்பம்சங்கள்? முழு தகவல்கள்!

பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து ஒரு அலசல்... என்னென்ன புதிய திட்டங்கள்?
* 2025-26ம் ஆண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடி கல்விக் கடன்
* காஞ்சிபுரம் புற்றுநோய் மையத்தை மேம்படுத்த 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* செமி கண்டக்டர் உற்பத்திக்கான தொழில்நுட்ப பூங்காக்கள்
* ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தொழில்நுட்ப பூங்கா
* ஆசியாவிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலை மாற்ற ரூ.500 கோடி
* ட்ரோன் தொடர்பாக புதிய பட்டய படிப்புகள்
* தமிழகத்தில் அனைத்து வகை அரசு கல்லூரிகளின் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு
* 8 மாவட்டங்களில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்க்கும் விரிவுபடுத்தப்படும்.
* வேளச்சேரி பிரதான சாலை முதல் குருநானக் கல்லூரி வரை ரூ.310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.
* தாம்பரத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்
* 10 இடங்களில் ரூ.77 கோடியில் தோழி விடுதி அமைக்கப்படும்.
* 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்
* 2,676 பள்ளிகளில் வகுப்பறைகள் ரூ.65 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
* மூத்த குடிமக்கள் பராமரிப்புக்கு அன்புசோலை மையங்கள் அமைக்கப்படும்.
* முதல்வரின் காலை உணவு திட்டம், நகரப்பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய ரூ.600 கோடி ஒதுக்கீடு
* ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும்.
* அரசு பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.1 கோடி வழங்கப்படும்.
* ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் அமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு.
* ராமதாதபுரத்தில் நாவாய் அருட்காட்சியகம் அமைக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு
* கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு
* கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு
* அனைத்து நகர்ப்புறங்களிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.3,700 கோடி ஒதுக்கீடு
* முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 6,100 கி.மீ., நீள சாலைகள் மேம்படுத்தப்படும்; இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு
* எழும்பூரில் அருங்காட்சியக வளாகத்தில் சிந்துவெளி பண்பாடு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
* அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு.
* சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் கட்டி தரப்படும். ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டப்படும்.
* ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
* ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
* ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டத்திற்கு ரூ.2,423 கோடி ஒதுக்கீடு.
* 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.6,668 கோடி ஒதுக்கீடு.
* மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு.
10 ஆயிரம் பெண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்படும். இதற்கு ரூ.37 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கு
* சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!