தேரோட்டத்துக்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில் தேர்!!

 
தஞ்சாவூர் தேரோட்டம்

வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. நடப்பாண்டில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் மே 1ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக தேர் அலங்கரிக்கும் பணிகள் தேர் தஞ்சை மேலவீதியில் உள்ள தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மேலவீதியில்  இருந்து மே 1ம் தேதி காலை 6 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கத் தொடங்குவர் .

தஞ்சை பெரிய தேர்

இந்த தேரின் உயரம் 19 அடி , அகலம் 18 அடியாகும். தேரின் சாதாரண எடை 40 டன் ஆகும். அலங்கரிக்கப்பட்டவுடன் 50 டன் எடையாக  இருக்கும்.இந்த தேரில் 165 மணிகள் மற்றும் 252 தெய்வங்களின் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. மே 1ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேரின் மேல் பகுதியில் சவுக்கு கட்டைகள் கொண்டு கட்டப்பட்டு வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. தேரின் முன்பகுதியில் குதிரை பொம்மைகள் வைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. மணிகளுக்கு வர்ணம் பூசும் பணி தேர் சுத்தப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய தேர்

தேரில் உள்ள மணிகளுக்கு வர்ணம் பூசும் பணியும் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று  வருகிறது. ஏப்ரல் 30 நாளைக்குள்  அனைத்து பணிகளும் முடிந்து தேரோட்டத்துக்கு தேர் தயாராகி விடும்.தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடையும். பக்தர்களின் தரிசனம்,  தேங்காய், பழம் உடைத்து வழிபட ஏதுவாக 14 இடங்களில் தேர் நிறுத்தப்படும். கோடை விடுமுறை மற்றும் மே 1 தொழிலாளர் தின தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்துக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web