பேச்சுவார்த்தையில் உடன்பாடு... டேங்கர் லாரி டிரைவர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்!

 
லாரி
 

தூத்துக்குடியில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சமையல் எரிவாயு நிறுவன டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் பாரத் பெட்ரோலியம் சார்பில் சமையல் எரிவாயு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சிலிண்டர்களில் சமையல் எரிவாயு நிரப்பப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு டிரைவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

டேங்கர் லாரி

இங்கு தேனி மாவட்டம் போடியை சேர்ந்த தினகரன் என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஓய்வெடுக்கும் அறையில் படுத்திருக்கும் போது திடீரென மரணம் அடைந்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது உடலை சிப்காட் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தினகரன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த நிறுவன வளாகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

டேங்கர் லாரி

இதையடுத்து நேற்று பிற்பகல், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் பாரத் பெட்ரோலியம் நிர்வாக இயக்குனர் (டெரிட்டேரி மேனேஜர்) பிளாண்ட் மேனேஜர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உயிரிழந்த தினகரன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காசோலையும் இன்சூரன்ஸ் மூலம் பெருந்தொகை மற்றும் தினகரன் மகள் படிப்புக்கான உதவி உள்ளிட்ட நிவாரணம் வழங்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது