வங்கதேச புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு!
வங்கதேசம் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 297 இடங்களில் 209 இடங்களில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்தக் கட்சியை மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மகன் தாரிக் ரஹ்மான் தலைமையேற்று வழிநடத்துகிறார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவர் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றக் கட்டடமான ஜதிய சங்கசத் பவான் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு அதிபர் முகமது சகாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதுவரை அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா மற்றும் கலீதா ஜியா ஆகியோர் மட்டுமே பிரதமராக இருந்த நிலையில், சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக வங்கதேசத்தில் ஆண் ஒருவர் பிரதமராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
