நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை... இன்றே குவிந்த குடிமகன்கள்!

 
டாஸ்மாக்

2018ல் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டம்  நடைபெற்றது. ஆலை நிறுவப்பட்ட நாள் முதல் சுற்றுவட்டார கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போராட்டத்தின் 100 வது நாளில் அடையாள போராட்டமாக அதிகப்படியான மக்களை ஒன்று திரட்ட போராட்டக்குழு முடிவு செய்தது. இதன் அடிப்படையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

சிறிது நேரத்தில் போராட்டக்களம் கலவர பூமியாக மாறியது.  இதனை கட்டுப்படுத்த காவல்துறை எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.  காவல் துறையினருக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.  64 பேருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.  இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மே 22 நாளை துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக 5வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடாமல் இருக்க  பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  நாளை மே 22ம் தேதி திங்கட்கிழமை முழுவதும் தூத்துக்குடியில் செயல்பட்டு ரும் 53 மதுபான கடைகளும், பார்களும் மூடப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web