2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… மதுபான பிரியர்கள் அதிர்ச்சி !
ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26 திங்கட்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை வடலூர் வள்ளலார் நினைவு தினத்தையும் சேர்த்து, இந்த மூன்று நாட்களிலும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் எந்தவித மதுவகைகளும் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கும் தெளிவான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தினங்களில் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
