டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல்... மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊழியர்கள், இந்த திட்டத்தால் வேலைப் பளு அதிகரித்திருப்பதாகவும், தங்களிடம் போதிய இடமில்லாததால் கடைகள் திறக்க முடியாது என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காலி பாட்டில்களை வாங்கும் போது ஒட்டப்படும் ரூ.10/- ஸ்டிக்கர் தொடர்பான கட்டுப்பாடுகள், அவசர நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நடைமுறைப்படுத்த கூடாது என ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், ஊழியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என உறுதியாக கூறியுள்ளனர்.

இந்த திட்டத்தின் நோக்கம், மதுபாட்டில்களை பொது இடங்களில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும். சென்னை புறநகரில் பெரிய இடங்கள் உள்ளதால் பிரச்சனை வரவில்லை; ஆனால் சென்னையில் உள்ள கடைகள் குறைந்த இடங்களில் உள்ளதால், ஊழியர்கள் இதை செயல்படுத்துவது சிரமமெனக் கூறி போராட்டம் நடத்துகின்றனர். இதனால் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
