தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக், இறைச்சி கடைகளை மூட உத்தரவு!
பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாளை (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொது அமைதியைப் பேணவும், கலாச்சார முக்கியத்துவத்தைக் கருதியும் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும். நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள், கிளப்புகள் மற்றும் உரிமம் பெற்ற அனைத்து மதுக்கூடங்களும் (FL1 முதல் FL11 வரை) செயல்பட அனுமதி இல்லை. தடையை மீறி மறைமுகமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் நாளை இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (ஜனவரி 17) 'காணும் பொங்கல்' என்பதால், மக்கள் இன்றே தங்களுக்குத் தேவையான இறைச்சிகளை வாங்கி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
