தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு - ‘குடி’மகன்கள் அதிர்ச்சி!

 
 டாஸ்மாக்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்னிறுத்தி, டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் நாளை டாஸ்மாக் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதலே பல்வேறு கட்டக் காத்திருப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு: தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதிய வசதி வழங்கப்பட வேண்டும். காலமுறை ஊதியம் மற்றும் இதர சலுகைகளை அமல்படுத்த வேண்டும்.குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

இன்று பிப்ரவரி 16ம் தேதி இரவு 10 மணிக்குக் கடைகளை மூடியவுடன், அதன் சாவிகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை காலை முதல் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

டாஸ்மாக் கடைகள் காலவரையற்ற முறையில் மூடப்படும் என்ற செய்தி மதுப்பிரியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாளை கடைகள் இயங்காது என்பதால், இன்று இரவு கடைகள் மூடப்படுவதற்கு முன்பாகவே பல இடங்களில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சட்டவிரோத மது விற்பனை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

தற்போது வரை தமிழக அரசு அல்லது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இருந்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரப்பூர்வமான அழைப்புகள் எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டால் அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!