சென்னை முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! கலெக்டர் உத்தரவு!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

சென்னை முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், எலைட் பார்களை இம்மாதம் ஜனவரி 16, 25, 26 ஆகிய 3 தினங்களிலும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தினங்களில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், கிளப் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். 

டாஸ்மாக்

ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், ஜனவரி 25ம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் இந்த 3 தினங்களிலும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல் 1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதைச் சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அறிக்கை வெளியிட்டுள்ளார். 

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல் பார்கள் மற்றும் எப்எல் 3ஏ, ஏஏ,மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் இந்த 3 நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அந்த மூன்று நாட்களும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web