கல்லூரி மாணவிகள் விடுதி முன் டாஸ்மாக் கிளப்... கடும் எதிர்ப்பு!

 
tasmac
 

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தமிழக அரசின் சமூக நீதி விடுதியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதிக்கு முன்புறமுள்ள திருமண மண்டபத்திற்கு டாஸ்மாக் கிளப்பாக செயல்பட உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக்

இந்த தகவலை அறிந்ததும் அப்பகுதி பொதுமக்களும், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, டாஸ்மாக் கிளப்பை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவிகளின் நலன் முதன்மை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!