பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு... தவறிய தனித் தேர்வாளர்களுக்கு தட்கல் விண்ணப்ப வாய்ப்பு!

 
தேர்வு
 

தமிழகத்தில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வாளர்கள், சிறப்பு தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வாளர்கள் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக பிளஸ் 2 தேர்வுக்கு ரூ.1,000 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ரூ.500 கூடுதல் கட்டணத்துடன் தேர்வு கட்டணமும் செலுத்த வேண்டும்.டிஎன்பிஎசி   தேர்வு  தேதியில்  திடீர்  மாற்றம்

இணைய வழி பதிவு தொடர்பான தகுதி மற்றும் வழிமுறைகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தேவையான விவரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!