விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தவெக சார்பில் 2 நிமிடம் மௌன அஞ்சலி.!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று 3ம் கட்டமாக பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு, புதுச்சேரியில் 51 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தவெக கல்வி விருது விழாவில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது ! 💔#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/5Xthkgjlyv
— 𝐒𝐀𝐑𝐀𝐍 🔱 (@itz_saran11) June 13, 2025
தவெகவின் 3ம் கட்ட கல்வி விருது விழா சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. விழா தொடங்கப்பட்டதும் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார் தவெக தலைவர் விஜய்.

அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை எனவும், அந்த சம்பவத்தை நினைத்தாலே பதற்றமாக இருப்பதாகவும் விஜய் தெரிவித்தார். மேலும், ”என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம். 2026 தேர்தலை பற்றியும் பேச வேண்டாம்”. மாணவர்களும், பெற்றோர்களும் மேடையில் அதிக நேரம் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
