தவெக அதிரடி... நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு!

தமிழகத்தில் நாளை மார்ச் 5ம் தேதி புதன்கிழமை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மும்மொழி கல்வி கொள்கை மற்றும் தொகுதி மறு சீரமைப்பு பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவைகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது என ஏற்கனவே அறிவித்துவிட்டன. அதே நேரத்தில் அதிமுக, தேமுதிக மற்றும் பாமக கட்சிகள் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகமும் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முன்னதாக அந்த கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் கலந்து கொள்வதாக செய்தி வெளியான நிலையில் தற்போது புஸ்ஸி ஆனந்த் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!