மார்ச் 7ம் தேதி தவெக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி... விஜய் கலந்துகொள்கிறார்!

இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் நோன்பை நேற்று மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ம் தேதி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மார்ச் 7ம் தேதி மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கழகத் தலைவர் விஜய், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இடம்: ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், ராயப்பேட்டை சென்னை தேதி: 07.03.2025 வெள்ளிக்கிழமை நோன்பு திறக்கும் நேரம்: மாலை, சரியாக 06.24 மணி மக்ரிப் பாங்கு: மாலை, 06.28 மணி மக்ரிப் தொழுகை: மாலை, 6.35 மணி (ஒய்.எம்.சி.ஏ. அரங்கிற்குள்) மக்ரிப் தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில் இப்தார் விருந்து நடைபெறும், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!