வருமான வரி ரிஃபண்ட் ஏன் தடை? வரி செலுத்துபவர்கள் குழப்பம்!

 
income tax
 

2025-ம் ஆண்டுக்கான வருமான வரி ரிஃபண்ட் தொடர்பாக பலருக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. “முரண்பாடுகள்” காரணமாக ரிஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டதாக வருமான வரித் துறையிடமிருந்து எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல்கள் வந்ததாக வரி செலுத்துவோர் தெரிவிக்கின்றனர். சமூக ஊடகங்களில் இதுகுறித்த ஸ்கிரீன் ஷாட்கள் வேகமாக பரவி வருகிறது.

இடர் மேலாண்மை செயல்முறையின் கீழ் வருமான வரி செயலாக்கம் இடைநிறுத்தப்பட்டதாக அந்த தகவல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பலருக்கு மின்னஞ்சல் வரவில்லை. போர்ட்டலில் ரிஃபண்ட் கிடைத்ததாக காட்டப்படுவதாகவும் சிலர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் எது உண்மை என தெரியாமல் வரி செலுத்துவோர் குழப்பத்தில் உள்ளனர்.

tax return

பட்டய கணக்காளர் பிரதிக் பர்தா கூறுகையில், அதிக ரிஃபண்ட் தொகை, 80C, 80D, HRA போன்ற கோரிக்கைகள் படிவம் 16-ல் உள்ள விவரங்களுடன் பொருந்தாதபோது இதுபோன்ற எச்சரிக்கைகள் வர வாய்ப்பு உள்ளது என்றார். இதுவரை வருமான வரித் துறை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடாததால், வரி செலுத்துவோரின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!