வாவ்... தேயிலை பெண் தொழிலாளிக்கு குடியரசு தின அழைப்பு!
நாடு முழுவதும் 77-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மில்லிகுன்னு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி இந்திராணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து கடிதம் வந்தது. அந்த கடிதத்தை வழங்க தபால் துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் வீட்டில் இல்லாததால், அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திராணியை நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கினர்.
கடிதத்தை திறந்து பார்த்த இந்திராணி, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்ததை அறிந்து நெகிழ்ச்சியடைந்தார். ஒரு சாதாரண தேயிலை தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு வந்தது அந்த பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்திராணிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
