அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்... போக்சோவில் தட்டி தூக்கிய காவல்துறை!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேல் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணினி ஆசிரியர் பள்ளியில் படித்து வரும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த மாணவிகள் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆசிரியர் டேவிட் மைக்கேல், மருத்துவ விடுப்பில் சென்று தலைமறைவானதாக விட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் ஆசிரியர் டேவிட் மைக்கேல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார், ஆசிரியர் டேவிட் மைக்கேலை தேடி வந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் பதுங்கி இருந்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!