சிலம்ப பயிற்சி பெயரில் அத்துமீறல்; 15 வயது சிறுமியை துன்புறுத்திய ஆசிரியர் கைது!

 
சிலம்ப பயிற்சியாளர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் க.சென்றாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் பெரிய அப்பணசாமி (37). இவர் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளித்து வந்தார். வழக்கம் போல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பயிற்சி அளித்தபோது, 15 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

போக்சோ நீதிமன்றம்

இதையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை விளாத்திகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானது.

போக்சோ

இதனைத் தொடர்ந்து சிலம்ப பயிற்சி ஆசிரியர் பெரிய அப்பணசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களின் பின்னணி குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கடும் கண்காணிப்பு தேவை என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!