பயங்கரம்: 12 வயது மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம், கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலம்புழா தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் அனில். இவர் கடந்த நவம்பர் 29-ம் தேதி, தனது பள்ளியில் பயிலும் 12 வயது மாணவனைத் தந்திரமாகத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தச் சிறுவனுக்குக் கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்து, மயக்க நிலையில் இருந்த மாணவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவன் இந்தத் துயரச் சம்பவத்தைத் தனது நண்பனிடம் பகிர்ந்துள்ளான். அந்த நண்பன் தனது தாயிடம் கூற, அவர் மூலம் மாணவனின் உறவினர்களுக்குத் தகவல் சென்றுள்ளது. உடனடியாக உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு முறையிட்டுள்ளனர். பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் மலம்புழா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து, ஆசிரியர் அனிலை போலீசார் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்துள்ளதாகப் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தைப் பள்ளி நிர்வாகம் மறைக்க முயன்றதாகவும், போலீசில் புகார் அளிக்கத் தாமதம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தாங்கள் தகவல் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுத்ததாகப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
