12ம் வகுப்பு பொதுத் தேர்வறையில் மாணவியிடம் பாலியல் சில்மிஷம்... ஆசிரியர் போக்சோவில் கைது!

 
கிருஷ்ணகிரி

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அறையில், தேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவி பொதுத்தேர்வு எழுத கிருஷ்ணகிரி அருகே ஒரு அரசு பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 

உத்தரபிரதேச போலீஸ்

 

12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல் தேர்வு நடந்த நிலையில், தேர்வு மைய மேற்பார்வையாளராக வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் (44) என்பவர் இருந்தார். இவர் ஹால்டிக்கெட்டை சரிபார்க்கும் போது தேர்வு எழுத வந்திருந்த மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி அவர் படித்து வந்த தனியார் பள்ளி முதல்வருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.

போக்சோ நீதிமன்றம்

இதையடுத்து தனியார் பள்ளி முதல்வர், தேர்வு மைய பொறுப்பாளரிடமும், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் செய்தார். தொடர்ந்து ஆசிரியர் ரமேஷிட் அன்றையன் தினம் இரவு போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணனும் விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர், அந்த மாணவியிடம் மட்டுமல்லாது அதே அறையில் தேர்வு எழுதிய மற்றொரு மாணவியிடமும் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

 

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டதாரி ஆசிரியர் ரமேஷைக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறையில் பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?