மாணவர்களுடன் தகாத உறவில் குழந்தை பெற்ற ஆசிரியைக்கு வாழ்நாள் தடை!
மான்செஸ்டர் நகரில் உள்ள ஸ்டாக்போர்ட் (Stockport) பகுதியில் ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணியாற்றிய ரெபேக்கா ஜாய்ன்ஸ், தனது ஆசிரியர் பணியின் புனிதத்தைக் கெடுத்ததற்காக இந்த உச்சகட்ட தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு, ரெபேக்கா தனது வகுப்பில் பயின்ற 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களுடன் தவறான உறவில் இருந்துள்ளார். இதில் ஒரு மாணவரைப் பலாத்காரம் செய்ததில் ரெபேக்கா கர்ப்பமடைந்து, ஒரு பெண் குழந்தையையும் ஈன்றுள்ளார். இது தொடர்பான டி.என்.ஏ (DNA) சோதனையில் அந்த மாணவர் தான் தந்தை என்பது உறுதியானது. கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம், லண்டன் நீதிமன்றம் அவருக்கு 6.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தற்போது அவர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறை தண்டனை ஒருபுறம் இருக்க, எதிர்காலத்தில் அவர் மீண்டும் ஆசிரியராகப் பணியாற்றிவிடக் கூடாது என்பதற்காக, இங்கிலாந்து கல்வித்துறை (Department for Education) தற்போது அவருக்கு ஆசிரியர் பணி செய்ய வாழ்நாள் தடை விதித்துள்ளது. இனி அவர் இங்கிலாந்தில் எந்தப் பள்ளியிலும், எந்தவொரு கல்வி நிலையத்திலும் நுழைய முடியாது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது மனநல ஆலோசனைகள் பெற்று வருவதாகவும், அவர்களின் அடையாளம் சட்டப்படி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையிலான உறவு குறித்து 'Position of Trust' என்ற கடுமையான சட்டம் உள்ளது. இதனை மீறுபவர்களுக்குச் சர்வதேச அளவில் எங்கும் பணி கிடைக்காத வகையில் 'Blacklist' செய்யப்படுவார்கள். பள்ளிகளில் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க, மாணவர்களுக்கான புகார் பெட்டிகள் மற்றும் ரகசிய உதவி எண்கள் இங்கிலாந்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
