மாணவர்களை வெளியே அனுப்பி வகுப்பறையில் ஆசிரியர் தற்கொலை… பள்ளி வளாகத்தில் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பாலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியில் தனஞ்சய் (51) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அவர், மாணவர்களுக்கு வகுப்புகளையும் நடத்தினார்.
மதிய இடைவேளையின் போது அலுவலகப் பணிகள் உள்ளதாக கூறி மாணவர்களை வெளியே அனுப்பிய தனஞ்சய், வகுப்பறை கதவு மற்றும் ஜன்னல்களை உள்ளே இருந்து பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பள்ளி வளாகத்திலேயே நடந்த இந்த சம்பவம் மாணவர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
