ஆசிரியருக்குச் செருப்பு மாலை... பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் போக்சோ சட்டத்தில் கைது!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் உள்ள அரசு உருது பள்ளியில் ஆசிரியர் ஜெகதீஸ் (39) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்தப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஆசிரியருக்கு அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவி ஒருவரால் பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ஒரு கட்டத்திற்கு மேல் ஆசிரியரின் தொல்லையைத் தாங்க முடியாமல் பெற்றோரிடம் புகார் அளிப்பதாக மிரட்டி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், புகார் அளித்தால் வகுப்பிற்கு வர அனுமதிக்க மாட்டேன் என்றும், அந்தப் பாடத்தில் பாஸ் ஆக முடியாது என்றும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், பள்ளி முடிந்தவுடன் தான் கூறும் இடத்திற்கு வருமாறு மாணவியைத் திடுக்கிடும் வகையில் மிரட்டி இருக்கிறார். மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர், அந்தச் சிறுமியின் அடிவயிற்றில் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவி பெற்றோரிடம் சென்று நடந்த எல்லாவற்றையும் கூறினார். ஆத்திரம் அடைந்த பெற்றோரும், உறவினர்களும், கிராம மக்களும் பள்ளிக்குச் சென்று, பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஜெகதீஸைச் சரமாரியாகத் தாக்கினர். அவருடைய சட்டையைக் கிழித்து, செருப்பு மாலை அணிவித்து, பள்ளியிலிருந்து வெளியே இழுத்து வந்தனர். அவரை போலீஸ் நிலையம் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்று சவனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் பல மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து ஆசிரியர் ஜெகதீஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
