அதிர்ச்சி வீடியோ... அரசு பள்ளியில் அவலம்... மேஜை மீது கால் வைத்து சுகமாக குறட்டை விட்டு தூங்கும் ஆசிரியர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்னா மாவட்டம் ஜப்ராபாத் தாலுகா காடேகாவன் கிராமத்தில் ஜில்லா பரிஷத் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வி.கே. முண்டே. ஆசிரியர் வி.கே. முண்டே பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்த போதே அவருக்கு திடீரென தூக்கம் வந்துவிட்டது.
टेबलवर पाय ठेवून शिक्षक भर वर्गात विद्यार्थ्यांसमोरच झोपले; जालन्याच्या जाफराबाद तालुक्यातील गाडेगव्हाण येथील जिल्हा परिषद शाळेतील प्रकार !
— Edu Varta (@EduvartaNews) June 20, 2025
.
.
.#jalna #jalnanews #zpschool #zpschoolteacher #eduvarta #educationalnews #viralvideo pic.twitter.com/TWzaPNupeo
அவர் மாணவர்களிடம் பாடத்தை படியுங்கள் என கூறிவிட்டு சேரில் அமர்ந்தபடி தூங்கிவிட்டார். ஆசிரியர் பாடம் நடத்தாமல் தூங்குவதை அங்கிருந்தவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில், ஆசிரியர் வி.கே. முண்டே, சேரில் அமர்ந்தபடி மேஜை மீது கால்களை தூக்கி வைத்தவாறு குறட்டைவிட்டு தூங்குகிறார். வீடியோ எடுக்கும் நபர், ஆசிரியர் எவ்வளவு நேரமாக தூங்குகிறார் என கேட்கிறார்.
அதற்கு மாணவன் ஒருவன் சுமார் ½ மணி நேரமாக தூங்கி கொண்டிருக்கிறார் என பதில் அளிக்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் தூங்குவது பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் வி.கே. முண்டே மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல கல்வி அதிகாரி சதீஷ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!