பரீட்சையக் கூட எழுத விடல ... 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்!

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்தன. கடைசித்தேர்வு நடைபெற்ற நிலையில் திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை அதே பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் தனியார் பள்ளியினை சேர்ந்த மாணவ மாணவிகள் எழுதினர். அப்போது ஒரு வகுப்பறையில் 6 மாணவிகள் மற்றும் 5 மாணவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் தேர்வினை எழுதிக் கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட அந்த தேர்வறையின் கண்காணிப்பாளராக ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர் சம்பத்குமார் நியமிக்கப்பட்டிருந்தார் . அவர் மாணவிகள் காப்பியடிக்கிறார்களா பிட் அடிக்கிறார்களா என்று சோதனை செய்வது போன்று தொடர்ந்து 6 மாணவிகளிடமும் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் மாணவிகள் பொது தேர்வு என்பதால் அமைதியாக தேர்வினை எழுதிக் கொண்டிருந்தனர். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவசர அவசரமாக தேர்வறையை விட்டு வெளியேறிய மாணவிகள் தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி போலீசார் சம்பத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் மீதான குற்றம் உண்மை என்பது தெரிய வந்தது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!