ஆசிரியை இடமாற்றம்...குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு கோனாா்கோட்டை கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெற்றோா் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வடக்கு கோனாா்கோட்டை கிராமத்தில் தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 32 மாணவா்-மாணவியா் பயின்று வருகின்றனா். தலைமையாசிரியராக அமல்ராஜ், ஆசிரியையாக அனிதா ஆகியோா் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், 17 ஆண்டுகளாக பணியாற்றிவந்த அனிதா, மந்திதோப்பில் உள்ள தமிழ் பாப்திஸ்து பள்ளிக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்குப் பதிலாக கூசாலிபட்டியில் பணிபுரிந்த யோசுவா தனசிங் நியமிக்கப்பட்டாா்.
ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பெற்றோா் நேற்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாததுடன், பள்ளியை முற்றுகையிட்டனா். காவல் துறையினா், பள்ளிக் கல்வித் துறையினா் பேச்சு நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் பெற்றோா் கலைந்து சென்றனா்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!